மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அழகர்சாமி ஆண்டாள் தம்பதியருக்கு 25/8/1952 ஆம் ஆண்டு மகனாப் பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜகாந்த். இவரின் மனைவியின் பெயர் பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இவர், 1979 ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் வெளியான ‘ இனிக்கும் இளமை ‘ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். இவர் தனது பெயரை விஜயராஜிலிருந்து விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். இவர் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Also Read : மாணவர்கள் எதிர்பார்த்த அந்த திட்டம்..! தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
இதனையடுத்து, 2005 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜயகாந்த் தேமுதிக தலைவர் ஆனார்.
இதனைதொடர்ந்து, இன்று தேமுதிக தலைவர் விஜகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தே.மு.தி.க நிறுவன தலைவரும், எனது தோழருமான விஜயகாந்த் அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முழு உடல்நலத்துடன் புத்துணர்ச்சியையும் பெற்றுப் பல்லாண்டு நீங்கள் மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ விழைகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.