மேள தாளத்துடன் கொண்டாடப்பட்ட போகி பண்டிகை..!

Bogi festival celebrated with drum beats-In Bogi Celebration

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்ரனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மயிலாப்பூரில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

பல்வேறு மாவட்டங்களில் போகி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. போகி பண்டிகைகளில் எரிக்கப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை எரிக்கக்கூடாது என்று மாசு கட்டுப்பட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here