Today Sports Update 2023

நியூயார்க் நகரில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் ஜோ சாலிஸ்பெரி ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேரியது. இதனை தொடந்து ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டி ஒன்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர்.
Also Read >> அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறி செல்கிறார் கோகோ காப்…!
அமெரிக்க ஓபன் தொடரின் தொடக்கத்திலேயே திறமையாக விளையாடிய செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆட்டத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.