YOUTUPE வீடியோக்கு லைக் போடுபவரா நீங்க? முக்கியமா நீங்க தான் படிக்கணும் இந்த செய்திய…

தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய் குமார் சமூக வலைதளங்களில் சிலர் நிதி மோசடி செய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக சைபர் கிரைம் பிரிவுக்கு நிதி மோசடி தொடர்பாக சமீபத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தது. சில மோசடி கும்பல் சமூக வலைதளத்தின் வாயிலாக மக்களுக்கு பேராசையை தூண்டி மோசடி செய்கிறார்கள். இவர்கள் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாக விளம்பரங்கள் மற்றும் SMS மூலம் தொடர்பு கொண்டு, சில சமூக வலைதளங்களில் லைக் மற்றும் கமெண்ட் செய்ய சொல்கின்றனர். இதனால் நல்ல வருமானம் கிடைக்குமென்று மக்களுடைய பேராசையை தூண்டி, அதிக பணம் பெறும் டாஸ்க்கை அவர்களிடையே அறிமுகம் செய்கின்றனர். இதற்காக ஆன்லைனில் குறிப்பிடப்பட்ட முன்பணத்தை செலுத்துமாறு சொல்கிறார்கள். இதற்கு வழிகாட்டுபவர்கள் தங்களை ஆன்லைன் வேலைகளை வழங்கும் யூடியூப் விளம்பரதாரர்கள் மற்றும் யூடியூப் புரமோட்டர்ஸ் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

அதுவுமல்லாது, சில கம்பெனி இணையதளங்கள் மற்றும் சில சமூக வலைதளங்களில் லைக்குகளை போடச்சொல்லி அதற்கு குறிப்பிட்ட பணத்தையும் அளிக்கிறார்கள். இவ்வாறு ஏமாறுபவர்களை ஒரு டெலிகிராம் குழுவில் சேர்த்து ஆன்லைனில் குறிப்பிட்ட முன்தொகையைச் செலுத்தி அதிக பணம் பெறும் டாஸ்க்கை அவர்களிடையே அறிமுகம் செய்து சில டாஸ்க்குகளில் கலந்து கொள்ள செய்கின்றனர். மேலும் எந்தவொரு டாஸ்க்கையும் முயற்சிக்கும் முன் ஒருவர் தனது கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழைய வேண்டும். அதற்குப்பிறகு பணத்தொகையை சில தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு கூறுவார்கள். தொடர்ந்து போர்ட்டல் பக்கத்தில் காணப்படும் சொத்து (Assets) என்ற இடத்தில் மக்களுடைய முதலீட்டின் மூலம் வந்த லாபத்தை அவர்களிடம் நம்பவைப்பதற்காக காட்டுவார்கள். முதலில் இந்த லாபம் மக்களின் வங்கி கணக்கில் நேராக வரவு வைக்கப்பட்டும். தொடர்ந்து அதன் லாபம் அதிகரிக்கப்படும் போதோ அல்லது, முதலீடு அதிகம் இருந்தாலோ அதனால் வருகிற பெருந்தொகையானது, அவர்களுக்கே (மோசடி கும்பல்) போய் சேரும். அதுமட்டுமல்லாது, அத்தொகையை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் போர்டலில் சொத்துக்களை பார்க்க மட்டும் தான் முடியுமே தவிர அவைகள் திரும்ப பாதிக்கப்பட்டவர்களுக்கு வந்து சேராது.

braking news Are you a YouTube video liker It is important that you should read this news

ஆகவே, அடையாளம் தெரியாதவர்கள் வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களில் அனுப்பப்படுகிற மெஸேஜ்களுக்கு பொதுமக்கள் பதிலளிக்கவோ, லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம் என்று வலியுறுத்தப்படுகின்றனர் என எச்சரிக்கையுடன் தெரிவித்தார். எனவே OTP ஐ தொலைபேசி அழைப்பு மற்றும் செய்தி மூலமாக யாருடனும் பகிர வேண்டாம் எனவும், மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் கூறினார். ஆகவே பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாது ஹெல்ப்லைன் எண் 1930 ஐ தொடர்பு கொண்டு இதுபோன்ற சைபர் குற்றங்களை, குறிப்பிட்ட அதாவது 24 மணி நேரத்திற்குள்ளாக புகார் செய்யலாம். அவ்வாறு செய்தால் பணத்தை மோசடி செய்தவர்களுடைய கைக்கு போகும் முன் அதனை மீட்டுக் கொள்ளலாம். ஆகவே ஆன்லைன் நிதி இழப்பு புகார்களை உடனுக்குடன் அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் மற்ற புகார்களை பதிவு செய்யுமாறும் கூறப்பட்டிருக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN