2023 ஆம் ஆண்டு ஜுன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அதன்படி, எரிவாயு சிலிண்டர் முதல் தங்கம் வரையில் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்த விதிகளில் சில பொதுவானதாகவும் மற்றவை புதியதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்கும். மார்ச் 2023 இல், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இப்போது இந்த விலை மாறுகிறதா அல்லது குறைகிறதா என்பது நாளை தான் தெரியவரும். ஜூன் 1-ம் தேதி முதல் EPFO விதிகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதன்படி, அனைத்து பயனாளர்களும் தங்கள் PF கணக்கை ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் மாற்றம் இருக்கும் எனவும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை ரெடி? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!
- அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய விருப்பமா? வந்தாச்சு புதிய வேலை வாய்ப்பு! அப்ளை பண்ணிடலாம் வாங்க!
- தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம் வாங்க!
- மாதம் ரூ.90,000 முதல் ரூ.1,50,000/- வரை சம்பளம் வாங்கிடலாம் மத்திய அரசு வேலையில்! பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் புதிய வேலை அறிவிப்பு!
- 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலை வாய்ப்பு! தமிழ்நாட்டிலேயே வேலை செய்திடலாம்!