BREAKING NEWS > 10TH, 12TH தேர்வு முடிவுகள்… முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது!

TN Education News

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுடைய மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், நாளை (ஜூன் 17) காலை 9 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதை மாற்றி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி வரும் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இந்த முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட வலைதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

Source Link > இந்து தமிழ்

பொறுப்பு துறப்பு:

மேலே கொடுப்பட்டுள்ள தகவல்கள் அல்லது செய்திகள் எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் குழுவினரால், அதன் உண்மை தன்மையை நன்கு ஆராயப்பட்டு பதிவிடப்படுகிறது. வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் வாசகர்களின் புரிதல், பயன்பாட்டிற்காக மட்டுமே. மற்றவர்களுடைய அறிவுசார் குறியீட்டுகளை மீறும் (Copyright Violation) நோக்கம் இல்லை. எனவே, நாங்கள் எந்த விதமான காப்புரிமையும் கோரவில்லை. தகவல் அனைத்தும் Fair Use Policy அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு அதன் மூல இணைப்பை (Source Link) கொடுத்துள்ளோம். இருப்பினும், உங்களுக்கு ஜாப்ஸ் தமிழ் இணையதளத்தின் செய்திகள், கட்டுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் படங்களின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு இமெயில் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button