BREAKING NEWS: குரூப் 2, 2ஏ தேர்வில் 1,83,285 பேர் ஆப்சென்ட் – TNPSC அறிவிப்பு – #JustNow

TNPSC LATEST NEWS 2022

TNPSC Announcement 2022

BREAKING NEWS 1,83,285 abstain in Group 2, 2A exam - TNPSC announcement - JustNow

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற TNPSC குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% பேர் மட்டுமே எழுதியுள்ளனர் என TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்த நிலையில், 9,94,878 பேர் (84.44%) மட்டுமே தேர்வு எழுதினார்கள் என்றும் இந்த தேர்வுக்காக ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்தவர்களில் 1,83,285 பேர் தேர்வு எழுதவில்லை என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது.

5,529 காலிப் பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் குருப் 2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் 1,83,285 பேர் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button