BREAKING NEWS > நயன்தாராவின் திருமணத்தை காண ஆசையா? வீடியோவை வெளியிட்டது NETFLIX..!

0

nayanthara vignesh shivan marriage

BREAKING NEWS Want to see Nayanthara's wedding The amazing video was released by NETFLIX..! See Here

தென்னிந்திய சினிமாவின் ஹாட் ஜோடியான நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. நயன்தாராவின் திருமணத்தை காண எண்ணற்ற ரசிகர்கள் ஆவலோடு இருந்தார்கள்.

ஆனால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருமண விழாவின் உரிமையை விற்பனை செய்து விட்டனர். இதன் காரணமாக அந்நிறுவனம் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்தது. திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது, தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என தடை விதித்தனர்.

தற்போது, நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. சூப்பர் ஜோடியான இவர்களுடைய திருமண வீடியோவை இயக்குநர் கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக புதிய புரோமோ வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.


RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here