BSNL RECRUITMENT 2023: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited BSNL) ராஜ்கோட், ஜாம்நகர் – குஜராத் ஆகிய இடங்களில் இளங்கலை டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு இளநிலைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள வேட்பாளர்கள் 30-11-2023க்கு முன்னர் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

About BSNL:
பிஎஸ்என்எல் (BSNL) பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்பது இந்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இது தொலைபேசி, இணையம், டிஜிட்டல் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிலையான தொலைபேசி வழங்குபவர்களாகவும் மற்றும் 110 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
BSNL Diploma Apprentice தகுதிகள்:
- ஏதேனும் பொறியியல்/தொழில்நுட்ப துறையில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 01.11.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. 18 முதல் 28 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் (OBC மற்றும் SC/ST இனத்தவருக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்).
BSNL விண்ணப்பிக்கும் முறை:
- NATS இன் இணையதளமான https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action க்குச் சென்று “LOGIN” என்பதைக் கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். “BSNL Latest Vacancies” என்பதை க்ளிக் செய்து, “Diploma Apprentice (Rajkot & Jamnagar)” பதவிக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். அனைத்து விவரங்களையும் கவனமாகப் சரிபார்த்து, விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
ALSO READ: BHEL நிறுவனத்தில் மூத்த ஆலோசகர் வேலைவாய்ப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். காலம் தவறி வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபட மாட்டது.
மேலும் விவரங்களுக்கு BSNL இணையதளத்திற்கு சென்று DIPLOMA APPRENTICE NOTIFICATION பார்வையிடவும்.