பும்ரா > சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும்! எதிர்பார்ப்புகளை ஒதுக்க வேண்டும்!

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரில் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனைதொடர்ந்து, இந்திய அணி டிஎல்எஸ் முறையில் நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இந்த வெற்றியின் மூலம் கைப்பற்றியது. வரும் 23ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து இந்திய கேப்டன் பும்ரா நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெற்றி பெற்று கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய நாள் பிட்ச் கொஞ்சம் உலர்ந்திருந்தது. இதனிடையே இரண்டாம் பாதியில் பிட்ச் மித வேகத்தில் இருக்கும் என்று கருதினோம். அதன்படி முதலில் பேட்டிங் செய்யும் திட்டத்துடன் களமிறங்கினோம். இதில் முதலில் பேட்டிங் செய்யும் திட்டமானது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனை பயன்படுத்தி இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Bumrah speach needs to field freely Expectations must be reserved full detils here

மேலும், ஒரு சில சமயம் விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். அந்த சமயம் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். மேலும் எதிர்பார்ப்புகளை ஓரம் வைத்து விட்டு சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும் என்று அவர் கூறினார்.