வங்கி தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்த எண்ணை அழைக்கவும்…

Call this number if you have any banking related queries

டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது இன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து நாம் செய்யும் செயலில் ஒன்றாகிவிட்டது. அன்றாட வாழ்க்கையில் முன்புபோல் வங்கிகளுக்கு செல்லாமல் கிரிடிட், டெபிட், க்யூ-ஆர் கோர்டு போன்ற பலமுறைகளில் பணப்பரிமாற்றத்தை நம் அன்றாட நடைமுறையில் செய்து வருகிறோம்.

இந்நிலையில்தான் பல மோசடியாளர்கள் மொபைல் எண்ணுக்கு கால் செய்து உங்கள் கார்டை அப்டேட் செய்ய உள்ளோம் என்று கூறி வங்கி எண் தொடர்பான விவரங்களை பெற்று மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வங்கி கணக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே அதில் நடக்கும் பணப்பரிமாற்றம், மற்றும் பண குறைவு பற்றிய விவரங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். இல்லையெனில் அந்த கணக்கானது செயல்படாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளது.

இதையடுத்து, வங்கி மோசடி மற்றும் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை பெறுவதற்கு வங்கிக்கு நேரில் செல்லாமலே ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cms.rbi.org.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 14440 என்ற எண்ணை தொடர்பு கொண்டோ உங்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here