டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கை மீண்டும் அனுமதிக்கலாமா? எலான் மஸ்க்கின் வாக்கெடுப்பால் பரபரப்பு..!

0
Can Donald Trump's Twitter account be reinstated Sensation due to Elon Musk's vote-Reinstate Donald Trump On Twitter

உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபலாமான நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரை 44 மில்லியன் மதிப்பில் வாங்கியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் ‘ப்ளூ டிக்’ வசதிக்கு கட்டணம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பேச்சு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்ததால் அவருடைய டுவிட்டர் கணக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முடக்கப்பட்டது.

இந்நிலையில், தற்பொழுது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி இருப்பதால் டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுமா? என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. இதற்கான வாக்கெடுப்பை எலான் மஸ்க் டுவிட்டரில் தொடங்கி உள்ளார். இந்த வாக்கெடுப்பில் பெரும்பாலானவர்கள் டிரம்பை சேர்க்கலாம் என்றே பதிவிட்டு வருகின்றனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here