என்னது இனிமேல் வாட்ஸ்-அப் மூலம் மெட்ரோவில் டிக்கெட் எடுக்கலாமா?

Can I get metro tickets through WhatsApp from now on-Metro Tickets In WhatsApp

தற்பொழுது உள்ள சூழ்நிலையில், விஞ்ஞான வளர்ச்சி என்பது வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் நிவாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இனி மெட்ரோ ரயிலின் டிக்கெட்டை வாட்ஸ்-அப் மூலம் பெற்றுகொள்ளலாம் என்பதை அறிவித்தது.

இந்நிலையில், வாட்ஸ்-அப் மூலம் மெட்ரோ ரயிலின் டிக்கெட்டை பெரும் வசதியை பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு வெளியிடப்போவதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரெயிலில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்திருந்தது. இந்நிலையில், ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயிலில் பயணித்த சுமார் 1,669 பயணிகள் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் 14 ஆயிரத்து 400 பேர் புதிதாக வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்க இணைந்திருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here