முன்னதாக நாம் எந்தவொரு கடைக்கு சென்றாலும் கையில் காசு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்பொழுது டிஜிட்டல் பண பரிவர்த்தனை வந்ததில் இருந்தே அந்த நிலை மாறியுள்ளது என்றே சொல்லலாம். தற்பொழுது உள்ள காலநிலையில் கிராமங்களில் இருக்கும் சிறிய கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு, நம்மோடு ஒன்றியதாக ஆன்லைன் பண பரிவர்த்தனை(UPI) அமைந்துள்ளது. UPI எனப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நாம் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.
இதுபோன்ற UPI பரிவர்த்தனையை இணைய சேவை இருந்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் UPI லைட் என்ற அம்சத்தை பயன்படுத்தி ரூ.200 வரையிலும் இணைய வசதி இல்லாமல் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பயனாளர்களின் வசதிக்காக இணைய சேவை இல்லாமல் பணபரிவர்த்தனை ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்படும் என்று RBI தெரிவித்துள்ளது.
Also Read : 12 ஆம் வகுப்பு மாணவர்களே… ட்ரிப்பு போக சீக்கிரம் ரெடியாகுங்க! கலெக்டரின் புதிய அறிவிப்பு!!
இந்நிலையில், டிஜிட்டல் பேமெண்ட்டுகளின் ஆஃப்லைன் பரிவர்த்தனை வரம்பை 200 ரூபாயில் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி, ரூ.2,000 என்ற ஒட்டுமொத்த வரம்பு நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவசர சூழ்நிலையில் உதவும் வகையில் UPI லைட் அம்சத்தை Paytm, PhonePe, Gpay உள்ளிட்ட செயலிகளில் எவ்வாறு பெறுவது என்று பார்ப்போம். முதலில் Paytm, PhonePe, Gpay உள்ளிட்டசெயலிகளில் எந்த செயலியை நாம் பயன்படுத்துகிறோமா அந்த செயலியில் உள் நுழையவும். பின்பு SETTINGSஎன்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அதில், UPI லைட் என்ற விருப்பத்தை தேர்வு செய்து அதன் மூலம் இணைய சேவை இன்றி பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.