உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் செயலி உள்ளது. இந்த வாட்ஸ் அப் செயலியின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளை செயல்படுத்தி வரும் நிறுவனம் தான் வாட்ஸ் அப் செயலியையும் செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம் அவ்வபோது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதியபுதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. முன்னதாக ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு ஒரு தகவலை பகிர நினைத்தால் அதனை டெக்ஸ்ட் மூலமாகவும் அல்லது வாய்ஸ் மூலமாகவும் தான் தெரிவித்து வந்தோம், ஆனால், சமீபத்தில் வெளியான அப்டேட்டில் வீடியோ மூலமாகவும் செய்தியை அனுப்பும் வகையிலான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டானது பயனாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read : வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் 850 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!
இந்நிலையில், தற்பொழுது மீண்டும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக வாட்ஸ் அப்பில் ஒரு குரூப் ஓபன் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்த குரூப்பிற்கு ஒரு பெயரை வைக்க வேண்டும். அதன்பின் தான் குரூப்பை கிரியேட் செய்ய முடியும். ஆனால், தற்பொழுது வெளியான புதிய அப்டேட்டில் புதிதாக whatsapp குரூப் கிரியேட் செய்யும்போது எந்தவித பெயரும் இல்லாமலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.
மேலும், இந்த புதிய அப்டேட் தற்போது whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அனைத்து பயனர்களும் இந்த அப்டேட்டால் பயனடையலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.