இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவை மிகவும் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. ஏனென்றால், இந்த நகரங்களில் தான் அதிகப்படியான தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் அமைந்துள்ளது. இதனால், இந்த பகுதிகளில் வெளியூர்களில் இருந்தும் அதிகப்படியான மக்கள் வேலைக்கு வருவதால் இந்த நகரங்களில் எப்போதும் அதிகப்படியான மக்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

இதுபோன்று பிஷியாக இயங்கி கொண்டிருக்கும் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னையில் இருந்து பெங்களூருக்கு அதிக வேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயிலானது அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே சுமார் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது இவற்றின் வேகம் 110 கி.மீட்டரில் இருந்து 130 கி.மீட்டராக அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
Also Read : மீண்டும் புதுசா கொரோனா வருதாம்..! உலக சுகாதார அமைப்பு விடுத்த அலார்ட்!!
வந்தே பாரத் ரயிலின் வேகம் மேலும் அதிகரித்த காரணத்தினால் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பயண நேரம் 20 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பயண நேரமானது 4 மணி நேரம் 25 நிமிடங்களாக இருந்த நிலையில் தற்பொழுது 4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் செல்லும் தடங்கள் மற்றும் சிக்னல்கள் மேம்படுத்தப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.