பதிவுக்கட்டணங்கள் ரத்து… தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்! யாருக்குனு பாருங்க…!

Latest Today Taminadu News

Latest Today Taminadu News

சமீபத்தில் தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியிருந்தது. இது பொதுமக்கள் தரப்பில் பெரும் அதிருப்தி தந்த நிலையில், தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம், 9 சதவீதம் வசூல் செய்யப்படும் என்ற இன்னொரு அறிவிப்பும் 2 நாட்களுக்கு முன்பதாக வெளியானது. அதாவது, ரூ.25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு 1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்த நிலையில் இனிமேல் ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இதில், நடுத்தர மக்களே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Also Read >> உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி விலை வைத்தது ரொம்ப தப்பு… அப்புறமா பேசியதுதான் ஹைலைட்டே…!

மேலும், இந்த கட்டண உயர்வால், பதிவுத்துறைக்கும், கட்டுமான நிறுவனகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். எனவே, பத்திரப்பதிவு துறை, இந்த கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும் என நாலாபுறமும் எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டியல் இனத்தவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.