திருச்சி NIT-யில் புதியதோர் வேலை! தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை!

திருச்சி NIT-யில் புதியதோர் வேலை
திருச்சி NIT-யில் புதியதோர் வேலை

திருச்சி NIT-யில் பணிபுரிய அறிய வாய்ப்பு. இந்நிறுவனம் Management Trainee வேலையில் ஒரு இடம் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலாண்மை பயிற்சி பணிக்கு கல்வி தகுதி ஆனது முதுகலை பட்டம் (MBA) பெற்றவர்கள் அல்லது இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் இத்துறை சம்பந்தமான பணி அனுபவம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும்.

ALSO READ : எக்ஸாம் தேவையில்லை! ஆயில் இந்தியா லிமிடெட்டில் மாதம் 50,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய ரெடியா இருங்க!

தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சியில் பணி அமர்த்தப்பட்டு, ரூ.20,000 மாத சம்பளமாக வழங்கப்படும். இந்த வேலையில் சேர வேண்டும் என்பவர்களுக்கு கால அவகாசம் நவம்பர் 17,2023 முதல் டிசம்பர் 15,2023 வரை வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் வயது வரம்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டணம் என்று எதுவும் கிடையாது, மேலும் அவர்கள் எழுத்து தேர்வு மூலமாகவும், நேர்காணல் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NIT பல்கலைக்கழகத்தின் Official Notification & Application Form மூலம் மேலும் சில தகவல்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்