கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தலைவர் தி.சசிக்குமார் அறிவிப்பு!

Latest News

கடலூர், ஜூன் 16:

கடலூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.

இது குறித்து கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் தி.சசிக்குமார் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திறந்தவெளி, தொலைநிலை கல்வித் திட்டம் மூலம் படிக்க மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதாவது வேளாண் இடுபொருள், உயிரியல் பூச்சி மற்றும் நோய்க் கொல்லிகள் உற்பத்தி குறித்த பட்டயப் படிப்புக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 6 மாத காலம் மற்றும் ஓராண்டு படிப்பும் உள்ளது.

இதேபோல, நவீன கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த சான்றிதழ் படிப்புக்கு பிளஸ்2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது ஓராண்டு படிப்பாகும். பட்டய, சான்றிதழ் படிப்புகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தை 04142-220630 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவித்தார்.

Source Link


பொறுப்பு துறப்பு:

மேலே கொடுப்பட்டுள்ள தகவல்கள் அல்லது செய்திகள் எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் குழுவினரால், அதன் உண்மை தன்மையை நன்கு ஆராயப்பட்டு பதிவிடப்படுகிறது. வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் வாசகர்களின் புரிதல், பயன்பாட்டிற்காக மட்டுமே. மற்றவர்களுடைய அறிவுசார் குறியீட்டுகளை மீறும் (Copyright Violation) நோக்கம் இல்லை. எனவே, நாங்கள் எந்த விதமான காப்புரிமையும் கோரவில்லை. தகவல் அனைத்தும் Fair Use Policy அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு அதன் மூல இணைப்பை (Source Link) கொடுத்துள்ளோம். இருப்பினும், உங்களுக்கு ஜாப்ஸ் தமிழ் இணையதளத்தின் செய்திகள், கட்டுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் படங்களின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு இமெயில் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button