அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Chance of rain in 13 districts of Tamil Nadu in the next 3 hours Met Office Information

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பகுதிகளில் அவ்வபோது மழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக டிசம்பர் மாத முதல் வாரத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த மிக்ஜம் புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கியது.

சென்னையை போலவே கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக விவசாய நிலங்கள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து பயிர்கள் முழுவதும் வீணானது. தென் மாட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இழப்புகளை மக்கள் சந்தித்த நிலையில், தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

ALSO READ : மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு..! பள்ளிக்கல்வித்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

இந்நிலையில், குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் இன்று முதல் வருகிற 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தை பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top