தமிழகத்தில் வருகிற 26 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Chance of rain in Tamil Nadu till 26th Meteorological Department

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயலால் சென்னையை வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் ஏராளமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் வெள்ளம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி சென்றனர். தற்பொழுது மழை குறைந்துள்ளதால் வெள்ள நீர் வற்றி இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள ஆறுகள், குளங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு ஆயிரக்கணக்கான கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தற்பொழுது மழை ஓய்ந்துள்ளதால் வெள்ள நீர் வற்றி மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

ALSO READ : மழை, வெள்ள பாதிப்பால் இன்று 12 ரயில்கள் ரத்து..! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

மேலும், இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் வருகிற 26 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top