இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்

Chance of rain in these districts today.. Meteorological Center information-Today Rain Information Status

தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.9) லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

மேலும், நாளை 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here