HDFC வங்கியில் ரூ.18,000 முதல் ரூ.1,00,000 வறை நிதியுதவியை பெற வாய்ப்புக்கள்! விண்ணப்பித்து பயன்பெறவும்.

0

HDFC Badhte Kadam Scholarship 2022-23:

இந்தியாவில் உள்ள பல நெருக்கடியைச் சந்திக்கும் குடும்பங்கள் உட்பட, பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த குடும்பங்களில் உள்ள நன்கு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வியைத் தொடரவும் / முடிக்கவும் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

hdfc badhte kadam scholarship 2022-23 – Rs.18,000 to Rs.1,00,000

hdfc badhte kadam scholarship 2022-23
hdfc badhte kadam scholarship 2022-23

இது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதல் தொழில்முறை இளங்கலை பட்டபடிப்புகள் வரை படிக்கும், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்குகிறது. HDFC Badhte Kadam ஸ்காலர்ஷிப் 2022 பெற விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் 30 செப்டம்பர் 2022 க்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிகட்டணம், கல்லூரி கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வு கட்டணம் என அனைத்து செலவுகளையும் செயல்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் வரையிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை முக்கியமாக தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் படிப்பை நிறுத்தும் விளிம்பில் இருக்கும் மாணவர்களுக்கு நிதி நன்மைகளை வழங்குவதை மையமாகக் கொண்டுள்ளது. நிதி உதவியுடன், பயனாளிகளுக்கு ஆரோக்கியம் / மனநலம் மற்றும் தொழில் தொடர்பான ஆலோசனைகள் போன்ற பிற வழிகாட்டுதல் நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஸ்காலர்ஷிப் தொகையுடன், மாணவர்கள் தங்களின் கல்விச் செலவுகள் மற்றும் டேட்டா ரீசார்ஜ், ஸ்டேஷனரி, புத்தகங்கள், ஆன்லைன் கற்றல் சாதனங்கள் போன்றவற்றுக்கான செலவுகளை பார்த்துக்கொள்ளவும் உதவுகிறது.

விண்ணப்பிக்க விரும்பவர்கள் கவனத்திற்கு: ஆண்டுக்கு குடும்ப வருமானம் குறைந்தது 6 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் இந்தியாவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HDFC வங்கியின் உதவித்தொகையை பெற தேவையான ஆவணங்கள் பின்வருமாறு: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / ஓட்டுநர் உரிமம் / பான் கார்டு, நடப்பு ஆண்டிற்கான சேர்க்கை சான்று, விண்ணப்பதாரரின் வங்கி பாஸ்புக், வருமானச் சான்று ஆகிய ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும், HDFC வங்கியின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 30 செப்டம்பர் 2022 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

HDFC வங்கியின் உதவித்தொகைகள் பெற விருபுபவர்களுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்கேற்ப நிதி உதவி வழங்கப்படும்.

HDFC Badhte Kadam Scholarship 2022-23 for Class 11 and 12 Students (General Category) – Rs. 18,000

HDFC Badhte Kadam Scholarship 2022-23 for General Graduation Students – Rs. 30,000

HDFC Badhte Kadam Scholarship for Professional Graduation Students 2022-23 –
Rs. 1,00,000

HDFC Badhte Kadam Scholarship 2022-23 for Students with Disabilities – Rs. 24,000

HDFC Badhte Kadam Scholarship for Competitive Exams Coaching 2022-23 – Rs. 72,000

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here