நிலவில் உலாவரும் சந்திராயன் 3… இஸ்ரோ வெளியிட்ட லேட்டஸ்ட்டு வீடியோ..!

கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

இதனிடையே, நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், நிலவில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி காட்டப்பட்டு உள்ளது.

Chandrayaan 3 on the moon Latest video released by ISRO read ir now

மேலும், லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது. நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து இன்று பிரக்யான் ரோவர் தரையிறங்கும் பணி தொடங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் தரையிறங்கும் ரோவர் 14 நாட்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது.

Also Read : தமிழக மாணவர்களே! இன்னும் 3 நாள்தான் டைம் இருக்கு..! அதுக்குள்ள சீக்கிரம் ரெடியாகுங்க…

இதனையடுத்து, லேண்டரில் இருந்து மெல்ல தரையிறங்கும் பிரக்யா, முதலில் தன்னை சுமந்த விக்ரமை படமெடுக்க உள்ளது. அதற்கு முன்னதாக லேண்டர் தரையிறங்கியபோது நிலவில் புழுதி படலம் ஏற்பட்டது. அந்த புழுதி அடங்கிய பின்னர் லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/chandrayaan_3/status/1694948081052303375?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694948081052303375%7Ctwgr%5E4d2a999353b44da63619263eb3e3987976abfda1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fdinasuvadu.com%2Famazing-visual-release-of-the-rover-landing-from-the-lander%2F