பள்ளிகள் திறக்கும் தேதியில் மீண்டும் மாற்றம்..! அரசின் அதிரடி அறிவிப்பு!!

Change in the opening date of schools Action announcement of the government read immediately

தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடந்த கல்வியாண்டிற்குரிய ஆண்டு இறுதித் தேர்வுகளானது நடத்தி முடிக்கப்பட்டது. அதனையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவினுடைய மற்ற மாநிலங்களில் இருக்கும் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் அந்தந்த வகுப்புகளுக்கேற்றவாறு பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அந்ததந்த மாநிலத்தினுடைய பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. அதன்படியாக மேற்கு வங்காள அரசும் பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவிப்பு செய்தது. ஆனாலும் வெயிலினுடைய அளவு இன்னும் குறையாமல் மேலும் உச்சத்தை தொட்டு இருக்கின்றது. இதனால் மேற்கு வங்காள அரசானது, ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்படும் தேதியை மாற்றி தற்போது ஒரு புது அறிவிப்பை அறிவித்திருக்கின்றது.

அதாவது, ஜூன்-5 அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்து, ஜூன்-7 ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஏப்ரல் -16 ன்போது, ஒரு வார வகுப்புகளை நிறுத்தினர். இதற்குக் காரணம், அப்போது, வெப்பத்தின் அளவானது, ஏறக்குறைய 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டிருந்தது. அதே போல இப்பொழுதும் வெயிலின் அளவு அதிகளவில் காணப்படுவதால் பள்ளிகள் திறப்பதை சற்று தாமதமாக்கியிருக்கின்றது. அதாவது, ஜூன்-7 லிருந்து, துவக்கப்பள்ளிகளுக்கும் ஜூன் 5 லிருந்து, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் துங்கப்பட இருக்கிறது. இந்தத் தகவலை பள்ளி கல்வித்துறை அறிவித்திருக்கின்றது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN