விவசாயிகளுக்கு உதவும் ChatGPT – மத்திய அரசின் கிரேஸி திட்டம்!

ChatGPT Coming to Help Farmers - Central Govt's Crazy Scheme

முக்கிய அரசாங்க திட்டங்களை விவசாயிகளிடம் முழுவதும் எளிமையாக கொண்டு சேர்ப்பதற்காக புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாக்ஸான ChatGPT தரவுகள் ஒருங்கிணைந்த வாட்ஸ்அப் சாட்பாக்ஸை ஒன்றை உருவாக்க மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) திட்டமிட்டுள்ளது. இணையதளத்தில் டைப் செய்து தேட முடியாத விவசாயிகள் கூட மத்திய அரசின் விவசாயம் சார்ந்த அந்த திட்டங்கள் பற்றி குரல் வழியாக தெரிந்து கொள்ள மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பாஷினி என்ற குழுவை அமைத்து தற்போது ChatGPTயின் தரவு மாதிரிகளைப் பயன்படுத்தி WhatsApp சாட்போட்டை சோதனை செய்து வருகிறது பாஷினி.

இந்த சேவை மூலம் விவசாயிகள் தங்கள் கேள்விகளை குரல் வடிவில் கேட்டால் அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பதில் சொல்லப்படும் என்று பாஷினி குழுவினர் கூறிகின்றனர். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு செயலியின் தரவுகளையும் இதனோடு இணைக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஓபன் AI நிறுவனம் ChatGPT செயலியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. நாம் கேக்கும் எவ்வளவு குழப்பமான, கடினமான கேள்விகளுக்கு கூட தெளிவாக பதில் சொல்லும் வகையில் இந்த செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Bing மற்றும் Edge பிரவுசர்களில் தகவமைத்து தந்துள்ளனர்.

இந்நிலையில்தான் மத்திய அரசும் ChatGPT தரவுகளை தங்கள் சாட் பாக்ஸில் தகவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சேவை மூலம் விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களின் கேள்விகளுக்கு எல்லாம் தெளிவாக பதில் சொல்ல முடியும் என்று நம்புகிறது. தற்போது ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, பெங்காலி, கன்னடம், ஒடியா, அசாமிஸ் போன்ற இந்த 12 வகை சாட்பாட் மொழிகளில் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. அதில் விவசாயிகள் எந்த மொழிகளில் கேள்விகளைக் கேட்டாலும், சாட்போட் அதே மொழியில் பதிலளிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவை முதன்மையாக இந்திய விவசாயிகள் பல்வேறு அரசு முயற்சிகள் மற்றும் சேவைகள் பற்றிய கேள்விகள் மற்றும் தகவல்களை சாட்பாட் மூலம் தெரிந்துக்கொள்வதற்கு பயன்படுத்துவதற்காக ChatGPTயின் WhatsApp சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here