தொடர்ந்து 2-வது நாளாக பிபிசி நிறுவனத்துக்கு செக்..! பரபரப்பு சம்பவம்..

Check for the BBC for the 2nd day in a row Sensational incident-2nd Day Of Income Tax Officers In BBC

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்களில் முக்கிய செய்தி நிறுவனமாக பிபிசி செயல்பட்டு வருகிறது. பிபிசி நிறுவனம் வெளியிடும் செய்தியானது ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடபபடும். இந்த பிபிசி நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த பிபிசி நிறுவனம் மும்பை, டெல்லி ஆகிய 2 இடங்களில் தனது அலுவலகத்தை கொண்டுள்ளது.

இந்நிலையில், பிபிசி இந்தியா நிறுவனத்திற்கு எதிரான வருமானவரித் துறையினரின் சோதனை டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்தது. அந்நிறுவனத்தின் நிதி தரவுகள் தொடர்பான மின்னணு மற்றும் காகித ஆவணங்களை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, குஜராத் கலவரம் குறித்த ஆவணப் படத்தை இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் பிபிசி அலுவலகத்தில் தங்களது சோதனையைத் தொடங்கினர். இரவு முழுவதும் நீடித்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் நடந்து வருகிறது.

பிபிசியின் நிதித்துறை, வேறு சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்களிடம் விசாரணை நடந்தினர். என்றபோதிலும் பிற ஊழியர்கள், பத்திரிக்கையாளர்களை வெளியேற அனுமதித்தனர். 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும் இந்த ஆய்வானது சர்வதேச வரி விதிப்பு, பிபிசி துணைநிறுவனங்களின் பரிமாற்ற விலை தொடர்பாக மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆய்வுகள் தொடர்பாக, வருமானவரித் துறையிடமிருந்து எந்த அதிகாரபூர்வ தகவல்கள் வரவில்லை. பிபிசி நிறுவனம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்’ என்று பதிவிடப்பட்டுள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here