செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) தமிழ்நாடு அரசு வேலை! முழு விவரங்களுடன்…

செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேலை
செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேலை

செங்கல்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) சமூக சேவகர் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இப்பணியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளதால் உடனே ஆப்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பணியிடமாக உள்ளது. கல்வி தகுதி BA படித்தவர்களாக இருந்தால் போதும் நவம்பர் 18,2023-லிருந்து நவம்பர் 30,2023-க்குள் விண்ணப்பித்து விடுங்கள். அதாவது BA சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பாடப்பிரிவில் எதாவது ஒன்றாக இருக்க வேண்டும்.

ALSO READ : திருச்சி NIT-யில் புதியதோர் வேலை! தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை!

சமூக சேவகர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர் மாத சம்பளமாக ரூ.18,536 பெற்றுக்கொள்ளலாம். வயது வரம்பு 42 வரை இருக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணமும் தேவையில்லை, மேலும் அவர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தாங்கள் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் என்றால் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

District Child Protection Officer,
District Child Protection Unit,
No: A80 10th Cross Street,
Anna Nagar,
Chengalpattu-603001.

மேலும் DCPU நிறுவனத்தின் Official Notification மற்றும் Official Website மூலம் தகவல்களை பெற்று கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பித்து விடுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்