சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) திட்ட உதவியாளர் – I (Project Associate – I) பதவிக்கு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Project Associate – I பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாகவும், Clerical Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.629/- நாள் ஊதியமாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தகுதிகள்:
- ஏதாவது பொறியியல்/தொழில்நுட்பத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (M.E./M.Tech.)
- NET/GATE/JRF/SET தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்ட இணை இளநிலைப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் ctdt.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிறகு விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். Director, Centre for Sponsored Research and Consultancy, Anna University, Chennai 600025. விண்ணப்பப் படிவங்கள் 14.11.2023 (மாலை 05.00 மணி)க்குள் கிடைக்கப்பெற வேண்டும். இப்பணிக்கு நவம்பர் ஒன்று முதல் இருந்து விண்ணபிக்க தொடங்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Also Read: BSNL நிறுவனத்தில் Diploma Apprentice பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு…
குறிப்பு: தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள வேட்பாளர்கள் தங்களின் விண்ணப்பத்தினை முடிந்த வரை விரைவில் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.