IMSC Chennai Recriutment 2023: சென்னை கணித அறிவியல் நிறுவனம் Deputy Controller of Accounts பணியில் ஒரு இடம் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது. சென்னையில் வேலை செய்ய வேண்டும் என்பவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பு.
விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 10, 2023 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Degree முடித்திருந்தால் போதும் சென்னை IMSC- ல் வேலை செய்யலாம்.

IMSC அறிவிப்பின்படி வயது வரம்பு ஆனது 10/12/2023 தேதியின்படி அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பக்கட்டணம் ரூ. 500 செலுத்தினால் போதுமானது.எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். Deputy Controller of Accounts பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 67,700 -78,800/- வரை வழங்கப்படும். விண்ணப்பதாரருக்கு e-mail id இருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விண்ணப்பிப்பவரின் தகவல் சரிபார்ப்பு விவரங்களை Official Website பார்த்து தெரிந்து கொள்ளவும்.
ALSO READ :தொலைத்தொடர்பு துறையில் பணி செய்ய அருமையான வாய்ப்பு! 75 ஆயிரம் சம்பளத்துடன் மத்திய அரசு வேலை!
IMSC நிறுவனத்தின் official site-ல் உள்ள விண்ணப்பப்படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும். மேலும் இது சம்பந்தப்பட்ட தகவல்களை Official Notification பெற்று இப்பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.