தாம்பரம் மேயருடைய குழந்தைக்கு நச்சுனு பெயர் வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..! என்ன பேருன்னு தெரியுமா?

Chief Minister M.K. named Tambaram Mayor child Nachu. Stalin Do you know what the name is-Chief Minister MK Stalin Named The Mayor Child

முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தாம்பரம் சென்று இருந்தார். அங்கு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் இந்திய வரலாற்றுப் பேரவையின் 81-வது மாநாடு நடப்பதால், அதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்.. வரலாறு மிகவும் முக்கியம் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்பாக முதல்வர் ஸ்டாலின் அங்கு இருந்த திமுக நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருந்தார். தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் பொன்முடி, டி.ஆர்.பாலு எம்.பி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன் தனக்கு பிறந்த கை குழந்தையுடன் வந்திருந்தார். குழந்தையை பார்த்ததும் முதல்வர் ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணனிடம் நலம் விசாரித்தார்.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி ஐயா நீங்க பேர் வைக்கணும்னுதான் இன்னும் பேர் வைக்காம இருக்கோம். நீங்களே என் மகனுக்கு பேர் வச்சிடுங்க என்று கூறினார். இதை கேட்ட முதல்வர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் குழந்தையை தூக்கி ‘திராவிட அரசன்’ என்று பெயர் வைத்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here