செஸ் விளையாட்டு போட்டி என்று சொன்னாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பிரக்ஞானந்தா என்ற இளைஞரைத்தான். ஏனென்றால் அந்த அளவிற்கு சிறுவயது முதலே பல போட்டியாளர்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தற்பொழுது பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் விளையாட்டு போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய செஸ் வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன் எரிகேசி, விதித் ஆகியோர் காலிறுதி போட்டுக்கு முன்னேறியுள்ளனர். இதில், காலிறுதி போட்டியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகேசி ஆகியோர் மோதினர். அதில், பிரக்ஞானந்தா 5-4 எனும் வீதத்தில் வெற்றி பெற்று அறையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
Also Read : மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை… முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!
இந்நிலையில், அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா அமெரிக்க வீரரான பேபியானோ காருணாவுடன் மோதவுள்ளார். பிரக்ஞானந்தா உலக கோப்பை காலிறுதி போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலக கோப்பை செஸ் போட்டியில் 2வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் லக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதியும் பெற்றுள்ளார்.
இதையடுத்து, பிரக்ஞானந்தாவின் இந்த செயலை பாராட்டும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் எனும் உங்கள் வரலாற்று சாதனைக்காகவும் எனவும் அரையிறுதி போட்டியில் வெற்றி தட்டி செல்வதற்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.