மறைந்த கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Chief Minister M. K. Stalin inaugurated the late Karunanidhis photo exhibition read it

தமிழகத்தில் ஜூன்-3 அன்று அதாவது நாளை தமிழக முன்னாள் முதவராக இருந்த மு. கருணாநிதியினுடைய 100-வது பிறந்தநாள் விழாவானது கொண்டாடப்பட உள்ளது. மேலும் இது அவருக்கு நூறாவது பிறந்தநாளாக இருப்பதால் இப்பிறந்தநாள் விழாவை வருடம் முழுவதுமாக மிகவும் பிரம்மாண்ட முறையில் சிறப்புடன் கொண்டாட ஏற்பாடு செய்கின்றனர். மேலும் இதனை தி.மு.க. கட்சி மற்றும் மு.க.ஸ்டாலின் தலைமயிலான தமிழக அரசு சார்பாகவும் நடத்தப்படுகின்றது.

அதன்படி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கான புகைப்பட கண்காட்சியானது, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இக்கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினையையும் வெளியிட இருக்கிறார். மேலும் கண்காட்சியின்போது முதல்வருடன், அமைச்சர்களும் பங்கேற்று கண்காட்சியைப் பார்வையிட்டார்கள். அதுமட்டுமல்லாது, மகாத்மா காந்தியினுடைய பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி என்பவர் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN