தமிழ்நாட்டில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Chief Minister M.K.Stalin opens 500 urban health centers in Tamil Nadu read it

தமிழக சட்டசபையில் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அளிக்கும் வகையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான உள்கட்டமைப்பு, கட்டிட வசதி மற்றும் மனித வளம் ஆகிய பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனைத் தொடந்து, அவைகளின் முதல்கட்ட பணியை முடித்து தற்போது அவைகள் திறக்கப்பட இருக்கிறது. அதாவது மாநகராட்சிகளான சென்னையில் 140, மதுரையில் 46, கோவையில் 50, சேலம் 25, திருச்சி 25, திருப்பூர் 25 மற்றும் நகராட்சிகளில் 189 என்று மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை இன்று(செவ்வாய்) பொதுமக்களுடைய பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளன.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(செவ்வாய்) தேனாம்பேட்டையில் இருக்கும் 117-வது வார்டுக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை நேரடியாக திறக்கவுள்ளார். மேலும் முதல்வர் காணொலி காட்சி மூலமாக மீதம் இருக்கின்ற 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறக்கிறார். இம்மையங்கள் அனைத்தும் காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையும் செயல்பட இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பொதுமக்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சேவைகளையும் இம்மையங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN