9 நாள் வெளிநாடு பயணம் முடித்து இன்று தமிழகம் திரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Chief Minister M. K. Stalin will return to Tamil Nadu today after completing a 9-day foreign trip dont miss read it now

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக 9 நாட்களுக்கு ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்றிருந்தார். தற்போது, அந்த பயணங்கள் அனைத்தும் முடிவடைந்தன. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணம் அனைத்தையும் முடித்துவிட்டு தமிழகத்திற்கு திரும்பினார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ஏறக்குறைய ரூ. 1300 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாகி இருக்கின்றன. இதனையடுத்து தமிழகத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின்போது, உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த பயணத்தின்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடைய அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதோடு மட்டுமல்லாது, அவர்களை தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்குபெறுமாரும், தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க வருமாறும் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து சிங்கப்பூரில் 312 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகினது. ஜப்பானில் ரூ. 83 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து டோக்கியோ நகருக்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது, 6 நிறுவனத்தினுடன் ரூ. 818 கோடி முதலீடு தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இவைகளை அனைத்தையும் முடித்துக்கொண்டு, அந்நாடுகளில் உள்ள ஒரு சில நிறுவனங்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து, இன்று காலை தமிழகம் திரும்புவதற்காக அங்கிருந்து கிளம்பி் இன்று இரவு 10 மணிக்கு சென்னை வருகிறர். . இதைத்தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து, விமான நிலையத்திற்குச் சென்று முதல்வரை வரவேற்பு அளிக்க இருக்கின்றனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN