முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

தமிழகத்தில் தற்பொழுது பல்வேறு இடங்களில் பால் பற்றாகுறை இருந்து வரும் நிலையில், பிரபலமான ‘அமுல்’ நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள வடமாவட்டங்களில் பால் கொள்முதல் செய்யும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.

Chief Minister M.K.Stal's letter..! details here

கொள்முதல் செய்யப்பட்ட பாலை பெங்களூருவில் விநியோகிக்கவும், பால் கொள்முதல் அதிகரிக்கும் போது தமிழ்நாட்டில் விநியோகிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லிட்டருக்கு 2 ரூபாய் அதிகம் வழங்கப்படும் என்றும், உடனடியாக கொள்முதல் தொகை வழங்கப்படும் என்றும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், ஆவின் கொள்முதல் தொகையை இழுத்தடிக்காமல் உடனடியாக வழங்கினால், உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திடம் செல்லமாட்டார்கள் எனவும் பால் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, இன்று கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், அமுல் நிறுவனம் இதுநாள் வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN