முதல்வர் ஸ்டாலின்-மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு! அரசியல் பற்றிய சந்திப்பா? : ஸ்டாலின் விளக்கம்

Chief Minister Stalin-Mamta Banerjee sudden meeting A meeting about politics Description of Stalin-Mamta Banerjee Meet Chief Minister Stalin

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு இல்ல விழா நடத்தினார். இவரது இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, மு.க.ஸ்டாலின் பேசுகையில் மம்தா பானர்ஜி பலமுறை சென்னை வந்துள்ளார் எனவும் அவர்தான் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச்சிலையை முரசொலி அலுவலகத்தை திறந்துவைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் அவர்களது இல்ல விழாவிற்கு வருகை தந்து என்னுடைய இல்லத்திற்கு வந்திருப்பது மரியாதைக்குரிய செயலாக இருக்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மேற்கு வங்கத்திற்கு விருந்தினராக அவசியம் வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இது தேர்தலை பற்றின சந்திப்பு இல்லை என்றும் தேர்தல் குறித்தோ அரசியல் குறித்தோ எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

அதன் பிறகு மம்தா பானர்ஜி பேசுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னுடைய சகோதரர் போன்றவர் என்றும் இது திட்டமிட்ட சந்திப்பு இல்லை என்றும் நான் விழாவிற்காக சென்னை வந்தேன் அப்போது ஸ்டாலினை சந்திக்காமல் நான் எப்படி சென்னையில் இருந்து செல்வேன் என்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். இது மரியாதை நிமித்தமான, சகோதர – சகோதரி உறவுகளுக்கு இடையேயான சந்திப்பு என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here