மருத்துவ மனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம்….! கேக் வெட்டி கொண்டாடிய மருத்துவர்கள்!

0
Children's Day celebration at the hospital Congratulations on cutting the cake-Children's Day Celebration

குழந்தைகள் தினவிழா நேற்று நவம்பர் 14 ஆம் தேதி அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த வகையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் தின விழா சிறாப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியில் துணை டீன் டாக்டர் விஜய் சதீஷ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஆதிலட்சுமி, கண்காணிப்பு அதிகாரி டாக்டர் ரமேஷ், குழந்தைகள் நல பேராசிரியர் டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் சிவக்குமார் மற்றும் முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், உலக நிமோனியா வார விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கடைபிடிக்கப்பட்டது. குழந்தைகள் தின விழாவினை அரசு பல்நோக்கு மருத்துவமனையின் டீன் மற்றும் டாக்டர் ஆர்.ஜெயந்தி அவர்கள் தலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகளுக்கு நிமோனியா விழிப்புணர்வு பற்றி நுரையீரல் நிபுணர் டாக்டர் சோமு சிவபாலன் பேசினார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here