தொடங்கியாச்சி கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை! அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம்

Christmas and New Year celebrations have begun Dramatically high airfares-Flight Ticket Will High Due To Holidays

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அவரவர்கள் சொந்த ஊருக்கும் , சுற்றுலா நகரங்களுக்கு சென்றும் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.அதனால் ஒரு சிலர் ரயில் மற்றும் விமானங்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது விமான பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருகிறது. பன்னாட்டு விமான கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர் ,சண்டிகர் ,கோவா ,கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும், கோவாவுக்கு வழக்கமாக ரூ 4500 கட்டணம் இருந்து வந்த நிலையில் தற்போது 13000 முதல் 14000 வரை உயர்ந்துள்ளது.இதனை தொடர்ந்து கொச்சிக்கு ரூ 4,000 இருந்த கட்டணம் தற்போது ரூ 10,000 ஆயிரமாக அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் அதிகளவில் விமான பயணம் உள்ளது. ரெயில் டிக்கெட் கிடைக்காததால் பலர் தற்போது விமான பயணத்துக்கு மாறி வருகிறார்கள். ஜனவரி முதல் வாரம் வரை விமான கட்டணம் அதிகளவில் உயரும். இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், விமான டிக்கெட்டுகள் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட அளவுதான் குறைந்த கட்டண டிக்கெட்டுகள் கிடைக்கும். அந்த டிக்கெட்டுகள் விற்பனை ஆனதும் அதிகமான கட்டணம் கொண்ட டிக்கெட்தான் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here