கிறிஸ்துமஸ் ரம் கேக் செய்வது எப்படி?

ஆண்டிற்கு ஒரு முறை வரும் கிறிஸ்துமஸ் பலராலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை தான் வருடா வருடம் அனைவரும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம்.

உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு வகையாக கிறித்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஒரு சில அலுவலகங்களில் டிசம்பர் 25-ஆம் தேதிக்கு முன்பே கிறித்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் தினம் என்றாலே ஸாண்ட்டா கிளாஸ், பரிசு பொருட்கள், விருந்து என அனைத்தும் நம் நினைவிற்கு வரும்.

கிறித்துமஸ் தினம் என்றாலே மிகவும் முக்கியாமானது கேக் தான். இப்போது எல்லாம் பாரம்பரிய முறையில் தயாரித்த கிறிஸ்துமஸ் கேக் எளிதில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவற்றின் விலை மதிப்பு அதிகம் என்பதால் யாரும் வாங்குவதில்லை. வீட்டிலே செய்து விடலாம் என எண்ணினாலும் செய்முறை தெரியவில்லை, இனி அதற்கான கவலை வேண்டாம். உங்களுக்காகவே மிக குறைந்த நேரத்தில் கேக் எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

கிறிஸ்துமஸ் விருந்துகளில் முக்கியமான ஒன்றாக இருக்கும் கேக் வகையில், சுவையான ரம் கேக் ரெசிபியை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Rum cake Recipe

தேவையான பொருட்கள்:

1. ரம் -முக்கால் கப்

2. முட்டை-4

3. பேக்கிங் பவுடர்-2 டீஸ்பூன்

4. வெண்ணெய் -அரை கப்

5. முந்திரி-5

6. பால் -முக்கால் கப்

7. சர்க்கரை-அரை கப்

8. வெண்ணிலா எசென்ஸ்-2 டீஸ்பூன்

9. மைதா மாவு-ஒரு கப்

10. கோகோ தூள் -ஒரு டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

Recipe Description
 • பேக்கிங் ட்ரேவில் வெண்ணெய் தடவி 180 டிகிரி செல்சியாஸ்-யில் நன்றாக சுடுப்படுத்தவும்.
 • அதன் பின்னர் பேக்கிங் ட்ரேவில் நறுக்கிய முந்திரி பருப்பை சமமாக கலக்கி பரப்பி விடவும்.
 • கேக் கலவையை செய்ய ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் மற்றும் உப்பு சேர்த்து சலித்து எடுத்து கொள்ளவும்.
 • சர்க்கரையை பொடி செய்து வைத்து கொள்ளவும். பின்னர் மற்றொரு கிண்ணத்தில் பொடித்த சர்க்கரை உடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழைக்கவும். பின்னர் முட்டையை நன்கு பீட் செய்து கொள்ளவும். குழைத்த வெண்ணெய் உடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.
 • இப்போது இதனுடன் செய்து வைத்துள்ள கேக் கலவையை சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
 • பின்பு அதில் படிப்படியாக ரம் அல்லது பால் சேர்த்து சரியான பதத்தில் கலக்க வேண்டும். அதாவது மாவு கெட்டி ஆகும் வரை கலக்க வேண்டும்.
 • இந்த மாவை பேக்கிங் ட்ரேவில் ஊற்றி 55 நிமிடங்கள் ஓவனில் வைத்து பேக் செய்யவும்.
 • வெந்ததும் வெளியில் எடுத்து சூடு ஆறிய பின்னர் உங்களுக்கு விரும்பிய படி அதை அலங்காரம் செய்து கொள்ளலாம்.
 • அந்த கேக்கை சுமார் 45 நிமிடங்கள் ஆறவிடவும். பின் சுவையான ரம் கேக் ரெடி.

ALSO READ >கிறிஸ்துமஸ் வந்தாச்சி..! வீட்டிலேயே ஈஸியா சாக்லேட் கேக் செய்யலாம் வாங்க!

இந்த ரம் கேக்கை குக்கரில் செய்வது எப்படி என்று பார்ப்போம்:

How to Make Rum Cake in a Cooker
 • ஒரு கனமான குக்கரில் பாத்திரம் வைப்பதற்கு ஸ்டாண்டு போல் ஒன்றை அழுத்தி விடவும்.
 • பின் அந்த ஸ்டாண்டின் மேலே கேக் செய்வதற்கு கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து, விசில் போடாமல் மூடிவிட வேண்டும்.
 • இதில் மிகவும் முக்கியமான ஒன்று அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும்.

ஒரு சிலருக்கு 45 நிமிடத்தில் கேக் முழுமையாக வெந்து விடும், ஆனால் சிலரின் குக்கர் பதத்திற்கு ஏற்ப ஒரு மணி நேரம் கூட ஆகலாம். அதன்பின் திறந்து பார்த்தால் மிகவும் சுவையான ரம் கேக் தயார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here