கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கிரேப் ஒயின் வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம் வாங்க..

Christmas Special Grape Wine Recipe In Tamil

கிறிஸ்துமஸ் தினம் என்றாலே கேக், இனிப்பு, விருந்து, குளிர்பானங்கள் போன்றவைகள் இல்லாமல் இருக்க முடியாது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் தினத்தில் பாரம்பரிய பானமான கிரேப் ஒயின் இல்லையேல் அது நிறைவு பெறாது. எனவே வீட்டிலேயே குறைந்த பொருட்களை கொண்டு எளிய முறையில் கிரேப் ஒயின் தயாரிக்கலாம்.

கிரேப் ஒயின் மிகவும் பிரபலமான ஒன்று. மது பானங்களில் ஒன்றான கிரேப் ஒயின் உடலுக்கு ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. இந்த கிரேப் ஒயின் கருப்பு திராட்சை பலத்தை கொண்டு சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது. கிரேப் ஒயின் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைகின்றன. நோயெதிர்ப்பு மண்டலம் வளம் பெரும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியாமாக இளமையை தக்கவைத்துகொள்ளும். நாம் அனைவரும் நாள்தோறும் சரியான உடற்பயற்சி, உணவு முறை உடன் குறைந்த அளவு கிரேப் ஒயின் பருகினால் இதயம் தொடர்பான நோய், சர்க்கரை நோய் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது.

எனவே கிறித்துமஸ் நன்னாளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் வீட்டிலேயே பாரம்பரிய முறையில் கிரேப் ஒயின் தயாரித்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்:

திராட்சை-5 கிலோ

சுடு தண்ணீர் -6 1\2 லிட்டர்

சர்க்கரை-6 1\2 கிலோ

ஈஸ்ட்-தேவையான அளவு

முளை கட்டிய கோதுமை-தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

Grape Wine Recipe

முதலில் 6 1\2 லிட்டர் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும். பின்னர் திராட்சை பழத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். பின் ஒரு மெல்லிய துணி கொண்டு திராட்சையின் ஈரத்தை நீக்க வேண்டும். அதன் பின், ஒரு ஜாடியில் கழுவி வைத்து நன்கு உலர்ந்த திராட்சை பலத்தை அந்த ஜாடியின் உள்ளே போடவும். அடுத்து அதை ஒரு மத்து கொண்டு நன்கு நசுக்கி விடவும். அதில் நன்கு சூடுபடுத்தி ஆற வைத்த தண்ணீர் மற்றும் சர்க்கரையை போடவும். மேலும் அதனுடன் ஒரு துணியில் பட்டை, கிராம்பு ஆகியவற்றை ஒரு பொட்டலமாக கட்டி அதில் போடவும்.

பின்னர் அதில் நான்கு நாட்களுக்கு பிறகு அந்த கலவையில் ஈஸ்ட் சேர்க்க வேண்டும். மேலும் முளை கட்டிய கோதுமை அதில் சேர்த்து கொள்ளவும். மீண்டும் ஒரு முறை மத்து கொண்டு நன்கு கிளற வேண்டும். அதன் பின்னர் முப்பது நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு முறை மத்து போட்டு கிளற வேண்டும். அதன் பின்னர் 45 நாட்களுக்கு பிறகு அந்த ஜாடியில் உள்ள பானத்தை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஊற்றி வைத்து கொள்ளவும். பின் தினம்தோறும் அதனை ஒரு டம்ளார் குடிக்கலாம். மிகவும் எளிய முறையில் வீட்டிலே தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்திற்காக பாரம்பரிய முறையில் மிகவும் சுவையான கிரேப் ஒயின் ரெடி.

ALSO READ >ஆஹா என்ன ருசி…! அப்படினு உங்க வீட்டல இருக்குறவங்க உங்க சமையல புகலனுமா? அப்ப இந்த ஈஸியான மட்டன் பிரியாணி செஞ்சு அசத்துங்க…

முக்கிய குறிப்பு:

  • இந்த ஒயின் செய்வதற்கு விதையுள்ள கருப்பு நிற பன்னீர் திராட்சை தான் பயன்படுத்த வேண்டும்.
  • இதை செய்யும் போது முக்கியமாக பழத்தின் சுவையை அறிய வேண்டும். பலத்தின் சுவை குறைவாக இருப்பின் அதற்கு சமமான சர்க்கரை சேர்க்க வேண்டும்.
  • ஒரு முக்கியமான குறிப்பு இந்த தாயரிப்பில் ஒரு போதும் பிளாஸ்டிக் பாட்டில் அல்லது பிளாஸ்டிக் ஜாரை பயன்படுத்த கூடாது. மேலும் இந்த ஒயின் தயாரிப்பு மிகவும் சுத்தமான முறையில் செய்ய வேண்டும்.
  • மேலும் இப்பொழுது ஒயின் செய்ய தொடங்கி விட்டால் அந்த ஒயினை சரியாக 45 நாட்கள் கழித்து தான் குடிக்க முடியும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here