ஆஹா என்ன ருசி…! அப்படினு உங்க வீட்டல இருக்குறவங்க உங்க சமையல புகலனுமா? அப்ப இந்த ஈஸியான மட்டன் பிரியாணி செஞ்சு அசத்துங்க…

Christmas Special Mutton Biryani Recipe In Tamil

கிறிஸ்துமஸ் தினம் என்றாலே முதலில் நியாபகத்தில் வருவது கேக் மற்றும் பிரியாணிதான். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட அனைவரும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த நன்னாளில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை கவனிக்கும் வகையில் சுவையான மட்டன் பிரியாணி ரெசிபியின் செய்முறை விளக்கத்தை கொண்டு வந்துள்ளோம்.

பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பிரியாணி உள்ளது. பல வகையான பிரியாணி இருந்தாலும் மட்டன் பிரியாணி சாப்பிடுவதே தனி சுவை தான். அதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே அதில் பெரும்பங்கு அசைவ உணவு தான் இருக்கும். அந்த வகையில் இந்த ரெசிபியின் செய்முறை விளக்கத்தை பயன்படுத்தி சுவையான மட்டன் பிரியாணியை செய்து அசத்துங்கள். அவர்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கும் அளவிற்கு இந்த செய்முறை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

1. ஆட்டுக்கறி- 500 கிராம்

2. பாஸ்மதி அரிசி- 500 கிராம்

3. கிராம்பு, பட்டை- நான்கு துண்டு

4. ஏலக்காய்-4

5. பிரியாணி இலை-2 துண்டு

6. இஞ்சி, புண்டு விழுது-3 டீஸ்பூன்

7. வெங்காயம்-3

8. பச்சை மிளகாய்-3

9. மிளகாய் தூள், மஞ்சள் தூள்-ஒரு டீஸ்பூன்

10. கொத்தமல்லி இலை- ஒரு கப்

11. புதினா இலை-ஒரு கப்

12. தக்காளி-1

13. தேங்காய் பால்-ஒரு கப்

14. தண்ணீர்- நான்கு கப்

15. நெய்-2 டேபிள்ஸ்பூன்

16. எண்ணெய்-50 மி.லி

17. உப்பு-சுவைக்கேற்ப

ALSO READ >இந்த கிறிஸ்துமஸ்க்கு முட்டை, மைதா இல்லாமல் கேக் செய்யலாம் வாங்க..

செய்முறை விளக்கம்:

Mutton Biryani Recipe In Tamil
  • முதலில் மட்டனை நன்கு கழுவி கொள்ள வேண்டும். மட்டனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கறி குழையாமல் வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • பாஸ்மதி அரிசியை பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி கொள்ளவும். அதன் பின் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.
  • குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதங்கிய உடன் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும். பின் கொத்தமல்லி இலை, புதினா, மிளகாய் தூள், தக்காளி போட்டு வதக்கவும். அதில் தேங்காய்பால், மிதமுள்ள மஞ்சள்தூள், தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறவும்.
  • மேலும் தண்ணீர் நன்கு கொதித்த பின் அரிசியை போட்டு கிளறி விடவும். பின் குக்கரை மூடி விசில் போடவும்.
  • இரண்டு விசில் வந்ததும் குக்கரை இறக்கி விடவும். விசிலை எடுத்த பின்னர் குக்கரின் மூடியை திறந்து நெய் ஊற்றி சாதம் உடையாமல் மெதுவாக கிளறி விடவும். பின் சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் சூடான சுவையான மட்டன் பிரியாணி தயாராகி விட்டது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here