
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற புகழுடனும் இருப்பவர் நடிகை நயன்தாரா அவர்கள். தென்னிந்திய நடிகை பட்டியலில் அதிக சம்பளம் பெறுபவர்கள் நயன்தாரா முதலிடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு ஆண் குழந்தைளும் உள்ளது. இவர் தமிழ் விஜய், அஜித் மற்றும் ரஜினிகாந்த் போன்ற பல்வேறு பிரபலங்களுடன் நடித்துள்ளார்.
ALSO READ : தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம்..! சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!!
சமீபத்தில் நடிகை நயன்தாரா இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த “ஜவான்” என்ற திரைப்படம் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியில் நடித்த முதல் படத்திலேயே நடிகை நயன்தாரா அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகை நயன்தாரா சினிமா துறை மட்டுமல்லாமல் பல்வேறு விதமான தொழிலையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்பொழுது சஷிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “டெஸ்ட்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தினை YNOT ஸ்டுடியோஸ் தயாரிக்க சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு “டெஸ்ட்” படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்பரைஸ் கொடுத்துள்ளது.