
இன்றைய காலக்கடட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறோதோ அதே அளவிற்கு ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பறித்து மோசடிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்பொழுது பல்வேறு டெக்னாலஜிகளை பயன்படுத்தி ஒருவருடைய புகைப்படத்தை இன்னொருவருக்கு பொருத்தி அதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அதிகமாக லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக பிரபலங்களின் புகைப்படங்களை வேறொருவரின் புகைப்படத்துடன் பொருத்தி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் புஷ்பா, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தானவின் போலி வீடியோ ஒன்று சமீபத்தில் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி பரவி வந்தது. அந்த வீடியோ கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இங்கிலாந்து வாழ் இந்தியப் பெண்மணியான ஜாரா படேல் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் அந்த பெண்மணியின் முகத்திற்கு பதிலாக ராஷ்மிகாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ALSO READ : ஐஸ்லாந்தில் 14 மணி நேரத்தில் ஏற்பட்ட 800 நிலநடுக்கம்..! அச்சத்தில் மக்கள்!!
நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ போன்று இந்தி நடிகை கத்ரீனாவின் போலி வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இதுகுறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன கூறுகையில், இதுபோன்று பிரபலங்களின் போலி வீடியோவை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், போலி வீடியோ பரப்போவோர் மீது கடும் நடுவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ குறித்து டெல்லி போலீசார் வழங்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.