நடிகை வரலட்சுமி நடித்த “ஹனுமான்” படம் பொங்கலுக்கு ரிலீஸ்..!

Cinema News In Tamil Actress Varalakshmi movie Hanuman released for Pongal

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் வரலட்சுமி சரத்குமார் அவர்கள். இவர் முதன்முதலில் தமிழ் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகர் சரத்குமாருக்கு பிறந்த முதல் மகள்’ ஆவார். நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை வரலட்சுமி நடிக்கும் பெரும்பாலான படங்களில் அவர் வில்லி காதாபாத்திரமாகவும் போலீஸ் கதாப்பத்திரமகவும் மட்டுமே இருக்கும். இந்நிலையில், நடிகை வரலட்சுமி சரத்குமார் ஐதராபாத் பேட்டி ஒன்றில் பேசுகையில், நான் தமிழில் நடித்த பெரும்பாலான படங்களில் போலீஸ் வேடங்களில் தான் அதிகமாக நடித்திருக்கிறேன். தற்பொழுது வரும் படங்களும் போலீஸ் கதாபாத்திரங்களாகவே வருகின்றனர். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதையில் இருக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ரசிகர்கள் புதுமையான விசியங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ALSO READ : இனி எக்ஸ் தளத்தின் வருமானம் இஸ்ரேல் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் – எலான் மஸ்க் அறிவிப்பு

மேலும், ஒரு படத்திற்கு எப்போதும் கதைதான் ஹீரோ என்று நான் நம்புகிறேன். நடிகை வரலட்சுமி எப்பொழுதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்றும் தெரிவித்தார். நான் நடித்த ஹனுமான் படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. தற்பொழுது கன்னடத்தில் மேக்ஸ் என்ற படத்தில் சுதீப்புடன் இணைந்து நடித்து வருகிருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top