சர்வதேச திரைப்பட விழா : வருகிற 14 ஆம் தேதி சென்னையில் தொடக்கம்! போட்டியில் 12 தமிழ் படங்கள்…

Cinema News in Tamil An international film festival is going to be held in Chennai

ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான 21 வது சர்வதேச திரைப்பட விழாவும் சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வருகிற 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவினை தமிழக அரசின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு நடத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 50 நாடுகளை சார்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இதில், தமிழ் திரைப்படங்களான அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், ராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், உடன்பால், விடுதலை பாகம் 1, வி3 ஆகிய 12 படங்கள் திரையிடப்பட உள்ளது. தொடக்க விழாவின் முதல் நாளில் கேன்ஸ் விருது வென்ற ‘அனாடமி ஆப் எ பால்’ என்னும் திரைப்படன் திரையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ : மாத தொடக்கத்திலேயே மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை..!

மேலும், வெளிநாட்டு படங்களான தி டீச்சர்ஸ் லவுஞ்ச், பேர்ப்பக்ட் டேஸ், டூ நாட் எஸ்பெக்ட் டூ மச் பிரம் தி யேண்டு ஆப் தி வேல்ட், பாலன் லீப்ஸ், ஸ்வீட் டீர்ம்ஸ், மெலடி போன்ற பல்வேறு படங்கள் திரையிடப்பட உள்ளனர். இந்த படங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் சினிமாஸ் (சத்யம்), சாந்தம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ், அண்ணா சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top