பிரபல ஓடிடி தளத்தில் இன்று வெளியானது “ஜப்பான்” படம்..!

Cinema News In Tamil Japan movie released today on popular OTT site

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்திக். இவர் நடிப்பில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் “ஜப்பான்” என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் ராஜீமுருகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜப்பான் படத்தில் கார்த்திக் நகையை திருடும் ஒரு திருடனாக நடித்துள்ளார். ஜப்பான் படத்தில் கார்த்தி, அனு இமானுவேல், ஜித்தன் ரமேஷ், சுனில் விஜய் மில்டன், வாகை சந்திரசேகர் மற்றும் பவா செல்லத்துரை உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியிடப்பட்டது. ஜப்பான் திரைப்படம் ரிலீஸ் ஆன அன்றே ராகவலாரன்ஸ் நடித்த “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படமும் ரிலீஸானது.

ALSO READ : தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இந்நிலையில், கார்த்திக் நடிப்பில் வெளியான “ஜப்பான்” திரைப்படம் உலக அளவில் இதுவரை 28 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஜப்பான் திரைப்படம் எப்பொழுது ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் இன்று(திங்கட்கிழமை) ஜப்பான் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 20 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top