பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வரும் ஷாருக்கானின் “டங்கி” திரைப்படம்..!

Cinema News In Tamil Shah Rukh Khans movie Dungi which is mixing at the box office

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான “டங்கி” என்ற திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பிரபலங்களும் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுத ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து “டங்கி” திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் முதல் பாதி காமெடியாக இருப்பதாகவும் இறுதி காட்சியில் ஷாருக்கான் எமோஷனலாக நடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ALSO READ : அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஷாருக்கான் நடிப்பில் வெளியான “டங்கி” திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே சர்வதேச அளவில் 70 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இப்படம் வெளியான முதல் நாளில் இருந்ததை விட வார இறுதியில் 40 முதல் 50 சதவீதம் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்ப குடும்பமாக சென்று இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர். அழகான ரொமான்ஸ் டிராமா திரைப்படமான ‘டங்கி’ பாக்ஸ் ஆபிஸிலும் கலக்க ஆரம்பித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top