ஓடிடியில் வெளியானது “சித்தா” திரைப்படம்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Cinema News In Tamil Sidha movie released in OTD For Today Fans Are Happy

நடிகர் சித்தார் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி “சித்தா” என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.

இப்படத்தில் சித்தார் சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில், சித்தார்த்துக்கும் அவருடைய அண்ணன் மகளுக்கும் இடையான பாசம் பிணைப்புதான் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : விஜய் ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு..! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

சித்தா திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தால் ஓடிடி தளங்கள் பலவும் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு போட்டி போட்டுக் கொண்டனர். இறுதியில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கியது. சித்தா திரைப்படம் ஓடிடியில் கடந்த 17 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய நாள் வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இப்படம் எப்பொழுது ஓடிடியில் வெளியாகும் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், ‘சித்தா’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று(செவ்வாய்க்கிழமை) சித்தா திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top