யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த லியோ படத்தின் “நா ரெடி தான்” பாடல்..!

Cinema News In tamil The song Na Redi Than from the film Leo which became the top trending song on YouTube

கைதி, விக்ரம், மாநகரம் உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள்தான் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “லியோ” திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்கள் கழித்து நடிகை திரிஷா நடித்தள்ளார்.

ALSO READ : மகனின் சொத்தில் தாய்க்கு உரிமை கிடையாது – உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

லியோ திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல பிரப்பலங்கள் நடித்துள்ளனர். இந்த படம் பல்வேறு சிக்கல்களை தாண்டி வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியான முதல் நாளே உலகம் முழுவதிலும் இருந்து ரூ.148 கோடி வசூலித்துள்ளதாகவும் உலகம் முழுவதும் இதுவரை ரூ.540 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, லியோ திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மெகா ஹிட் அடித்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி தான் வரவா” பாடலின் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே 20 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்பாடல் யூடியூபில் உலக அளவு டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்